3 வயது இளையவருடன் திருமணம்..! 29 வயது ஆண் எம்எல்ஏவை கரம் பிடிக்கும் 32 வயது பெண் எம்எல்ஏ! யார் தெரியுமா?

ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்து பிரபலமான எம்எல்ஏ தன்னை விட வயது குறைவான எம்எல்ஏவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


2017-ல் உத்தரப்பிரதேசம் ரேபரேலி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இந்த தொகுதியில் சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆவர் அதிதி சிங். இவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் அதிதி சிங்.  

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் அதிதி சிங். அக்டோபரில் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு நடத்திய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் அதிதி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியது காங்கிரஸ் தலைமை.

இப்படி பல சர்ச்சைகளால் பிரபலம் ஆன அதிதி சிங்கிற்கு வயது 32. அவர் தற்போது தன்னை விட 3 வயது இளையவரான பஞ்சாப் மாநிலம் ஷாகித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அங்கத் சிங் சைனிக்கை கரம்பிடிக்கிறார். அவருக்கு வயது 29. இவர்களுக்கு நவம்பர் 21-ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்கள் இந்து மற்றும் சீக்கிய முறைப்படி திருமணம் செய்கிறார்கள். ரேபரலி தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த அகிலேஷ் சிங்கின் மகள்தான் அதிதி சிங். இது மட்டுமின்றி ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்ததால் பிரபலம் ஆனவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங்.