ஒரு பெண் தன் குட்டைப் பாவாடைக்குள் வைத்திருந்த முதலை புகைப்படம் வைரலாகியுள்ளது
பாவாடைக்குள் முதலை குஞ்சு! போலீசை அதிர வைத்த இளம் பெண்!

அமெரிக்காவின் சார்லோட்டி மாகாணத்தில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாகச் சென்ற கார் ஒன்றைத்தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் இருந்தனர். மேலும் 3 ஆமைக் குஞ்சுகள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டு இருந்ததைப்பர்த்து மேலும் சோதனையிட்ட போது காருக்குள் ஒரு பையில் மேலும் 41 ஆமைக்குஞ்சுகள் இருந்தது தெரிய வந்தது.
வேறு என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்கள் என போலீசா கிண்டலாகத் தான் கேட்டனர். ஆனால் கேட்டபோது அவர்களுக்குத் தெரியாது அந்தப் பெண் அப்படி ஒரு அதிர்ச்சி அளிக்கப் போகிறார். என்று. அந்தப் பெண் தனது குட்டைப் பாவாடைக்கு உள்ளே இருந்து முதலைக் குஞ்சு ஒன்றை எடுத்து வெளியே விட்ட போது போலீசார் அதிர்ந்து பின்வாங்கினர்.
பின்னர் அந்த அரிய வகை உயிர்களை மீட்ட போலீசார், அவற்றை வைத்திரூந்த பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.