உயிருக்கு போராடிய நிலையிலும் உன்னாவ் பெண் தன் சகோதரனிடம் கூறிய வார்த்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களால் அடித்து , கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தபட்ட பெண் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்பாக தன் சகோதரனிடம் நெஞ்சை உருக்கும் வகையில் பேசிய வார்த்தைகளை அவரது சகோதரன் கூறியுள்ளார்.


23 வயதான உன்னாவ் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தனது வழக்கறிஞரை சந்திப்பதற்காக ரேபரேலி என்ற இடத்திற்கு அந்தப் பெண் சென்று கொண்டிருக்கும் போது, பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட இருவர் உட்பட ஐந்து நபர்கள் அந்தப் பெண்ணை அடித்து கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

90% உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் டெல்லி மருத்துவமனைக்கு பின்னர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு காரணமான அந்த பெண்ணை தாக்கிய 5 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது சகோதரனிடம் அந்தப் பெண் , மனதை உருக்கும் வகையில் கூறிய வார்த்தைகளை அவரது அண்ணன் தற்போது வெளியிட்டுள்ளார். 


அதில் அந்த பெண் என்னை காப்பாற்று, நான் உயிரை இழக்க விரும்பவில்லை. எப்படியாவது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் . அவர்கள் தூக்கிலிடப்படுவதை நான் நேரடியாக பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக அவரது சகோதரர் கூறினார். 

மேலும் இதுபற்றி பேசிய அவரது சகோதரர் குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன் என்று எனது சகோதரிக்கு உறுதி அளித்துள்ளேன். எனது சகோதரிக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். வழக்கு தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆன பிறகு குற்றவாளிகள் விடுவிக்கபடக்கூடாது என அந்தப் பெண்ணின் சகோதரர் கூறினார். 

மேலும் ஐதராபாத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்கவுண்டர் செய்யப் பட்டது சரிதான் எனவும் அந்த பெண்ணின் சகோதரர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.