வாசலில் ஒன்று! பின்புறம் மற்றொன்று! முன்புறம் இன்னொன்று! அதிமுக MLA வீட்டில் செத்து கிடந்த 3 நாய்கள்! திக்திகில் சம்பவம்!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்களை மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவமானத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி என்னும் தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏ வாக மனோன்மணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டி என்னும் கிராமத்திலுள்ள சோலை கவுண்டர் தோட்டம் என்னுமிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேற்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக மனோன்மணி அவர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தார். கோவிலிலிருந்து வீடு திரும்பியபோது, அவர் வளர்த்து வந்த 3 நாய்களும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. உடனடியாக மனோன்மணி நிகழ்ந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவருடைய மகன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால், இவரை மிரட்டுவதற்காக மர்ம நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சென்ற தேர்தலிலேயே  இவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தன.

இவருடைய வீட்டின் வாசலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாய்களுக்கு இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.