உறங்கிக் கொண்டிருந்த மருமகள் குத்தி கொலை..! மாமியாருக்கும் கத்தி குத்து..! வீட்டுக் கதவை திறந்து விட்டது யார்? மதுரை பகீர்!

வீட்டில் உறங்கி கொண்டிருந்த பெண்ணின் மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையிலுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் குமரகுரு என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் லாவண்யா. நேற்று அதிகாலை லாவண்யாவும், குமரகுருவின் தாயாரான சீனியம்மாளும் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் லாவண்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் மாமியார் சீனியம்மாளையும் அந்த மர்ம கும்பல் கத்தியால் குத்தியுள்ளனர். சம்பவமறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று லாவண்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சீனியம்மாளை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

லாவண்யாவின் செல்போன் ரேஞ்ச் மற்றும் சிசிடிவி கேமராக்கள் ஆதாரங்கள் காவல்துறையினரை குமரகுரு போது சந்தேகிக்க செய்துள்ளது. லாவன்யாவுக்கும் வேறொருவருக்கும் இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக ஆத்திரமடைந்து குமரகுரு இவ்வாறு செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

தொடர்ந்து காவல்துறையினர் குமரகுருவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ரேஸ்கோர்ஸ் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.