ஏன் இப்படி கேவலமா நடந்துக்குறீங்க? வெளிப்படையாக கேட்ட சன் டிவி அனிதா? யாரை தெரியுமா?

பிரபல நடிகை ஒருவர் பெயரில் பொய்யான வலைத்தள பக்கத்தை உருவாக்கிய நபருக்கு அவர் பதிலடி கொடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை அனிதா சம்பத். தொலைக்காட்சி சேனல்களில் செய்தி தொகுப்பாளராக சீரும் சிறப்புமாக பணியாற்றி வருகிறார். இளையதளபதி விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின்னர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அவருடைய நடிப்பை பாராட்டும் வகையில் பல சினிமா வாய்ப்புகளும், வெப்சீரிஸ் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் அவரை மனதளவில் நோகடிக்கும் வகையில் வேறொரு நபர் ஒருவர் இவருடைய பெயரில் சமூக வலைத்தளங்களில் ஒரு பொய் கணக்கை உருவாக்கியுள்ளார்.

அந்த முகநூல் பக்கத்தில் "ஜிப்ஸி" திரைப்படத்தினை "திரௌபதி" திரைப்படத்தோடு ஒப்புமை படுத்தி கேவலப்படுத்தி இருந்தார். இதனை அறிந்த அனிதா சம்பத் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, " பொய் கணக்கு. இதை தவிர வேறு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. எவனோ ஒருவன் மிகவும் கோழைத்தனமாக என்னுடைய வலைத்தள பக்கத்தில் மூலம் அவருடைய கருத்துக்களை கூறியுள்ளார். நான் இல்லை என்று கதறி அழுது அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. இந்த பக்கத்தை யாரும் பயன்படுத்தாதீர்கள். என்னுடைய உண்மையான சமூக வலைதள பக்கம் கீழே உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.