அச்சச்சோ, சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்துச்சா..? தொடரும் கைது படலாம்.

டி.என்.பி.எஸ்.சி. 4 தேர்வில் கண்டறியப்பட்ட முறைகேடு குரூப் 2, குரூப்1 தேர்விலும் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையில், சீருடை பணியாளர் தேர்விலும் இந்த முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு பற்றி வெளிஉலகத்திற்குத் தெரியவந்த நேரத்தில், ‘8,888 காவலர் பணிகளுக்கான சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்தது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் 8,888 பணியிடங்களுக்கான காவலர் தேர்வைச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. லட்சக்கணக்கானோர் எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வுகளில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தேர்வானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோன்று விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் கூறப்பட்டது.

குரூப் 4 தேர்வைவிட, இந்த தேர்வில் அதிகப்படியான குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேசாம, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே விசாரணையைத் தொடக்கிவிடலாம்.