திருமண மண்டபத்தில் வெடித்த குண்டு! சம்பவ இடத்திலேயே 63 பேர் பலி - ஆப்கானிஸ்தான் அலறல்

திருமண விழாவின்போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 63 பேர் பலியான சம்பவமானது ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல். இங்கு 17 ஆம் தேதியன்று பிரம்மாண்டமான முறையில் திருமண விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரத்தின் மிகப்பெரிய விழா ஹாலில் இந்த திருமணம் நடப்பதாக இருந்தது. இரு வீட்டார் கூட்டமும் விழா ஹாலில் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்வதற்கு என பல நூற்றுக்கணக்கான வேலை ஆட்கள் பம்பரம் போல் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் இசை கச்சேரியில் மூழ்கி இருந்தனர். இவ்வாறு அனைத்தும் நல்லவிதமாகவே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக அசம்பாவிதம் நிகழ்ந்தது. இசை கச்சேரி நடந்து கொண்டிருந்த இடத்தில் பயங்கர சத்தம் கேட்டது, அது என்னவென்றால், நாசகார மர்மகும்பல் திருமண விழாவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தியுள்ளது. 

மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் இந்த கோர தாக்குதலானது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. மீட்பு பணியினர் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த சடலங்களை மீட்டு எடுத்தனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 63 பேர் விபத்தில் பலியாயினர். 

உயிர் தப்பிய மணமகன் சர்வதேச ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, "நான் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழந்து அனாதையாக உள்ளேன். எத்தனை இன்பங்கள் வந்தாலும் இந்த துயர என் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. வாழ்க்கையின் மகிழ்ச்சியான தொடக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் என்னை மனதளவில் நொறுக்கியது. என் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி சடங்கில் நான் கலந்துகொள்ள மாட்டேன். அவர்களின் முகத்தை பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை" என்று கதறி அழுது கூறினார்.

இந்த சம்பவமானது ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.