இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது .அந்த பின்னர் நடந்த சூப்பர் அவரும் டிராவில் முடிந்தால் அதிக பவுண்டரிகளை அடுத்த இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பை வழங்கப்பட்டது .
5 ரன்னுக்கு பதில் 6 ரன்கள்! நியூஸிலாந்தின் உலகக்கோப்பை கனவை மண்ணோடு மண்ணாக்கிய அம்பயர்கள்! வைரல் வீடியோ!
ஐசிசியின் இந்த முடிவால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்கனவே கிளம்பியுள்ள நிலையில், நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் நடுவர்களின் தவறால் நடந்த ஒரு சம்பவம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது .
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரின் 4-வது பந்தை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் லெக் சைடு நோக்கி அடுத்து இரண்டாவது ரன்னை ஓட முயற்சித்தார் . இரண்டாவது ரன் ஓடிக்கொண்டிருக்கும் போது மார்டின் கப்டில் அடித்த த்ரோவ் ஆனது பென் ஸ்டோக்சின் பேட்டியில் தெரியாமல் பட்டு பவுண்டரி சென்றது .
இதனால் நடுவர்கள் அவர் ஓடி எடுத்த இரண்டு ரன்களையும் மற்றும் ஓவர் த்ரோவில் போன 4 ரன்களையும் சேர்த்து ஆறு ரன்களை இங்கிலாந்து அணிக்கு வழங்கினர் . இந்த சம்பவம் ஒன்றே இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய பெரிதும் உதவியது . ஆனால் 6 ரன்களை வழங்கி நடுவர்கள் பெரிய தவறு இழைத்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி விதிப்படி ஓவர் த்ரோவ் போகும் போது, இரு பேட்ஸ்மேன்களும் ஓடி முடித்த ரன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் நேற்றைய போட்டியில் இரண்டாவது ரன்னை பெண் ஸ்டோக்ஸ் மற்றும் ரஷீத் ஓடி முடிக்காத நிலையில், குப்தில் அடித்த த்ரோவ் ஆனது பெண் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு ஓடி முடித்த ரன் 1 , மற்றும் ஓவர் த்ரோவ் 4 ரன்கள் என 5 ரன்கள் மட்டும் தான் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் மாறாக ஓடி முடிக்காத 2வது ரன்னையும் சேர்த்து 6 ரன்களை நடுவர்கள் இங்கிலாந்து அணிக்கு வழங்கியது, இந்த பெரிய தவறே இங்கிலாந்து அணி போட்டியை ட்ரா செய்ய மிகவும் உதவியது. நடுவர்களின் தவறான முடிவால் நியூஸிலாந்து அணிக்கு கிடைக்க வேண்டிய உலகக்கோப்பை மாறாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்ததுள்ளது என்ற சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. நடுவர்களின் தவறான முடிவை முன்னாள் நடுவரான சைமன் டபளும் உறுதி படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.