முதல் கணவர் கொலை..! என் தந்தையை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன்! 2வது திருமணம் செய்த கவுசல்யா ஆவேசம்!

கணவரை ஆணவக்கொலை செய்த தந்தையின் விடுதலைக்கு எதிராக மகள் போராடி வருவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உடுமலை சங்கர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதிப்பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் உடுமலை சங்கரை கொலை செய்தனர். இதற்கு எதிராக கௌசல்யா புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கௌசல்யாவின் தந்தைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருடன் செயல்பட்ட அவருடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்ககானது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதியரசர்கள், கௌசல்யாவின் தந்தையை குற்றவாளியில்லை என்று கூறி விடுவித்தனர். மேலும் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் தண்டனையையும் குறைத்தனர். 

இவர்களுடைய விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கின் தீர்ப்பு குறித்து கவுசல்யா கூறுகையில், "இந்த வழக்கின் தீர்ப்பானது என் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக நான் என்னுடைய தந்தையின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கானது நேற்று தமிழகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.