உடுமலை கவுசல்யா அரசுப் பணி பறிபோனது! காரணம் கொங்கு ஈஸ்வரன்!

உடுமலை சங்கரின் முதல் மனைவி கவுசல்யாவின் அரசுப் பணி பறிபோனதற்கு காரணம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.


திண்டுக்கலை சேர்ந்த கவுசல்யா திருப்பூர் உடுமலையை சேர்ந்த சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கவுசல்யா பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். சங்கர் தாழ்த்தப்பட்ட சமுதாத்தை சேர்ந்தவர். இதனால் கவுசல்யாவின் பெற்றோர் சங்கர் மற்றும் கவுசல்யாவை கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றனர்.

 

   இந்த தாக்குதலில் சங்கர் கொல்லப்பட்டார். காயங்களுடன் மீண்ட கவுசல்யா அண்மையில் பறை இசைக் கலைஞர் சக்தி என்பவதை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் முதல் கணவரான உடுமலை சங்கரை ஆணவக் கொலைக்கு கவுசல்யா பறி கொடுத்து இருந்தார்.

 

   இதனால் கவுசல்யாவுக்கு கருணை அடிப்படையில் மத்திய அரசு பணி கொடுத்திருந்தது. இதனை அடுத்து உதகை குன்னூர் வெலிங்கடனில் உள்ள ராணுவ கன்டோன்மென்டில் இள நிலை எழுத்தராக கவுசல்யா பணிக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றியபடியே பெரியார் இயக்கங்களுடன் தொடர்பிலும் கவுசல்யாக இருந்தார்.

 

   அண்மையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு கவுசல்யா பேட்டி கொடுத்தார். அப்போது இந்தியா மீது தனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது இல்லை என்று கவுசல்யா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கவுசல்யாவை கன்டோன்மென்ட் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது.

 

   இந்த விவகாரத்தை பொறுத்தவரை கன்டோன்மென்ட் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. ஏதேனும் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் கவுசல்யா மீது புகார் அளித்தது யார் என்று விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது.

 

  கவுசல்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தான் கன்டோன் மென்ட் நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கன்டோன்மென்ட் நிர்வாகம் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

 

   தற்போது கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது ஏன் என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கவுசல்யா அளிக்கும் விளக்கம் திருப்தியாக இல்லை என்றால் அவர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்.