கேப்டன் மிகவும் நல்லவர்! அவரை விமர்சிக்கவே மாட்டேன்! ஸ்டாலின் மகன் உருக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒருபோதும் தான் விமர்சிக்க மாட்டேன் என்று மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மு க ஸ்டாலின் மகன் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

நான்கு நாட்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கியது முதல் தற்போது வரை அதிமுக பாஜக தலைவர்களை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளரை எதிர்த்து கேப்டனின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுவதால் கேப்டன் குறித்தும் உதயநிதி கடுமையாக விமர்சித்தார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்றார். விஜயகாந்த் மீது தான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை விமர்சித்து தான் பேசுவதில்லை என்று உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம் விஜயகாந்த் உடன் இருப்பவர்கள் தான் மிகவும் கேவலமான வர்களாக இருக்கிறார்கள் என்று சுதீஷ் மற்றும் பிரேமலதாவை உதயநிதி ஒரு பிடி பிடித்தார்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அதுவும் தேமுதிகவின் எதிர்க்கட்சியாக கருதப்படும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மகன் விஜயகாந்தை புகழ்ந்து பேசி இருப்பது தேமுதிகவினருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.