போலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம்பமா..?

சட்டத்தை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் அவர்களை கைது செய்வது வழக்கமாக அரசு எடுக்கும் நடவடிக்கைதான். தி.மு.க.வுக்கு மட்டுமின்றி பா.ஜ.க.வுக்கும் இதுதான் நடந்துவருகிறது.


வேல் யாத்திரைக்குக் கிளம்பும் எல்.முருகனையும் தினமும் கைது செய்து, இரவு நேரத்தில்தான் காவல் துறை விடுதலை செய்துவருகிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருக்கும் உதயநிதி, தங்களை மட்டும் காவல் துறை அடக்கி ஒடுக்குமாறு நினைக்கிறார்.

இந்த நிலையில் காவல் துறை உயர் அதிகாரிக்கு எதிராக உதயநிதி மிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .குத்தாலத்தில் உதயநிதி கைது செய்யப்பட்ட பிறகு பேசியது இதுதான். ‘’

’’என்ன அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால்தான் வந்தேன், மைக் பிடித்து பேச கூட இல்லை எனக்கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். அப்போது கூட்டத்தினரை சமாதானம் செய்து வன்முறை வேண்டாம் எனக் கருதி கைது செய்யுமாறு கோரினேன்.

தூண்டிவிடுபவர் எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் அதை செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் (திமுக) ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா? என்று மிரட்டியுள்ளார்.

தேர்தல் நடக்கும் முன்னரே ஆட்சிக்கு வரப்போகிறோம் என்ற ஆணவத்துடன் ஆடும் உதயநிதியை அடக்குவது யாரோ..?