தளபதி விஜயின் தம்பி விக்ராந்துக்கு உதவி! குடும்பத்திற்குள் கொம்பு சீவுகிறாரா உதயநிதி?

நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் பக்ரித் என்ற திரைப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார்.


நீண்ட இடைவெளிக்குப் பின்பு திரைத்துறையில் நடிகர் விக்ராந்த் கம்பேக் அளித்துள்ளார். நடிகர் விக்ராந்த் நடிகர் நம்முடைய தளபதி விஜய்க்கு தம்பி முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது "பக்ரித் " என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தை இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை   தயாரிப்பு நிறுவனமான எம்10 தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் . இப்படத்தில் விக்ராந்துக்கு  ஜோடியாக நடிகை வசுந்தரா இணைந்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவி இன் சார்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகின. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

ஒட்டகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் முழுவதுமாக பார்த்துள்ளார்.

படத்தின் கதை போக்கை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின் இந்தத் திரைப்படத்தின் வெளியிடும் உரிமையை தானே பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். 

ஆக இந்த பக்ரீத் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.