பட்டத்து இளவரசரிடம் ஆசி வாங்கினார் அடிமை நேரு… தி.மு.க.வினரை அதிரவைக்கும் உதயநிதி அராஜகம்.

திருச்சியில் நேரு என்றால் அசைக்கமுடியாத அரசியல் சக்தி. அப்படிப்பட்டவரை சென்னைக்கு இழுத்துவந்து, ஊர் ஊராக பஞ்சாயத்துப் பேச வைத்தது தி.மு.க. தலைமை. அவரும் அடிமையாக மாறிப்போனார்.


இந்த நிலையில் தன்னுடைய 69வது பிறந்த நாளை கொண்டாடிய நேரு, அதற்காக தி.மு.க.வின் பட்டத்து இளவரசர் உதயநிதியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். இந்த அவமானத்தை ட்வீட் செய்து புகைப்படத்துடன் போட்டுவிடவே, தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் கொதித்து எழுந்துள்ளனர்.

நேருவைப் போன்று அத்தனை தலைவர்களும் இனிமேல் உதயநிதியிடம் ஆசி வாங்குவது கட்டாயம் என்பதைப் சொல்வதாகவே இந்த ட்வீட்டை பார்க்கின்றனர். அடுத்து, இதே வழியில் துரை முருகனும் ஆசிர்வாதம் வாங்குவார். அப்புறமென்ன, இன்பநிதியிடமும் ஆசிர்வாதம் வாங்கவேண்டிய அவசியம் வரலாம்.

தி.மு.க.வினருக்கு எத்தனை பட்டாலும் புத்திவராது ..