பகுத்தறிவுக் கொள்கைகளை தமிழகத்தில் பரப்பி ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
தி.மு.க.வை அழிக்க உதயநிதியே போதும்..! பா.ஜ.க.வை பார்த்து பயந்துவிட்டாரா ஸ்டாலின்.
அண்ணா, கருணாநிதி ஆகியோர் காலத்தில் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது, கோயிலுக்குச் செல்வது போன்றவை கடும் குற்றமாக கருதப்பட்டன. இவற்றை எல்லாம் அடித்து உடைக்கும் வகையில், தி.மு.க.வில் அடுத்த தலைமுறையான உதயநிதி, ஒரு பிள்ளையார் படத்தை ட்வீட் செய்திருப்பது கட்சிக்குள் கடும் குழப்பத்தை விளைவித்துள்ளது.
இத்தனைக்கும் விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த நிலையில் திங்களன்று அதிகாலையில் விநாயகர் சிலையை நெஞ்சோடு அணைத்து படம் எடுத்து அதனை ட்வீட் செய்திருக்கிறார். இந்த விவகாரம்தான் கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிள்ளையார், முருகனை வைத்து அரசியல் செய்வதற்குத்தான் பா.ஜ.க.வும் அதி.மு.க.வும் இருக்கிறது. இப்படி தி.மு.க.வின் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு ஓட்டு அரசியல் செய்யலாமா என்று உதயநிதியை எதிர்த்து பதிவு போட்டு வருகின்றனர். பா.ஜ.க.வின் ஆன்மிக அரசியலை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல், ஸ்டாலின் ஆலோசனைப்படியே இப்படி பிள்ளையார் படத்துடன் ட்வீட் செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
கட்சிக் கொள்கைகளை கடைபிடிக்காத நபர்களை கட்சியில் இருந்து கட்டம் கட்டுவது தி.மு.க.வின் மரபு. அந்த வகையில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.