திருடிவிட்டு குழந்தையை கடையில் மறந்துவிட்டுச் சென்ற இளம் பெண்! திரும்பி வந்த போது சிக்கிய பரிதாபம்!

அமெரிக்காவில் திருடச் சென்ற இடத்தில் பெண் ஒருவர் தனது கை குழந்தையை மறந்து விட்டு விட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் பெண்களுடன் கூட்டாக ஷாப்பிங் மால்களுக்கு சென்று பொருட்களை திருடுவது வழக்கமாக நடந்து வரும் ஒரு குற்றச்செயல். அந்த வகையில் நியூயார்க் பகுதியில் நேற்றைய தினம் பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு பெண்களுடன் பாம்பி பேபி என்ற ஷாப்பிங் மால் ஒன்றுக்குள் சென்றுள்ளார்.

அங்கு அவர்களுடன் பேசிக்கொண்டே ஷாப்பிங் மாலுக்குள் குழந்தைகளை வைத்து கொண்டு செல்லும் தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து அந்த வண்டியை திருடிச் செல்ல வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளை வைத்து தள்ளிச் செல்லும் அந்த வண்டியை திருடுவதிலேயே கவனம் கொண்ட அப்பெண் தன் குழந்தையின் மீது கவனம் செலுத்தவில்லை

இதையடுத்து வண்டியை திருடிச்சென்று சிறிது தூரம் சென்ற பின் தான் ஞாபகம் வந்தது தன் குழந்தையை ஷாப்பிங் மாலிலையே விட்டு விட்டு வந்து விட்டோம் என்று. பின் ஆறு நிமிடங்கள் கழித்து அப்பெண் மீண்டும் ஷாப்பிங் மாலுக்கு சென்று தன் குழந்தையை மீட்டு வந்துள்ளார்.

இவரது இச்செயல் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தென்பட காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அப்பெண்ணை மட்டும் விட்டுவிட்டு உடன் இருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.