பெண்ணின் மண்டை ஓட்டுக்குள் நெழிந்த புழு! ஆப்பரேசன் செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு தலையில் கட்டி இருப்பதாக அறிவித்து மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொண்ட போது அது கட்டி அல்ல என்றும் புழு என்றும் தெரிய வந்தது.


நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்ம் 41 வயது ராச்சல் பால்மா. வினோதமான பிரச்சினைகளுடன் இவரை இவரது பெற்றோர் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பால்மா நீண்ட நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்படுவதாகத் தெரிவித்தார். 

கற்பனையான தோற்றங்கள் தோன்றி மறைவதாகக் கூறிய அவர், காபி கோப்பையைக் கூட நடுக்கமின்றி கைகளால் உறுதியாக பிடிக்க முடியவில்லை என்றும்,  யாருக்கும் மெசேஜ் அனுப்ப டைப்கூட செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார். 

வீட்டிலும், வேலையிலும் பலவிதமான குழப்பங்கள் வெளியில் செல்லும்போது வீட்டை திறந்தபடியே விட்டுச் செல்வது என பல அவதிகளைச் சந்தித்து வந்த பால்மா, மருத்துவமனையிலாவது தீர்வு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மருத்துவர்களை சந்திக்க வந்தார். 

பால்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் புற்றுநோய் கட்டி இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதற்கு மண்டையோட்டை திறந்து செய்யப்படும் ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டே தீரவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து தீர்வு அல்லது மரணம் என்ற நிலையை எதிர்கொள்ள பால்மா தயாரானார். 

அறுவை சிகிச்சை நாளும் வந்தது மூளையில் கட்டியை அகற்றும் எதிர்பார்ப்புகளுடன் மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால் அங்கு இருந்தது கட்டியல்ல நாடாபுழு. அதனை நீக்கிய பின் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நிறைவு செய்தனர். 

மருத்துவத்துறையில் இத்தகைய நிகழ்வு மிக அரிதானது என்கின்றனர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் பால்மா நலமாக உள்ளார். அதிலும் நாடா புழு உயிரோடு இருந்துள்ளது அதிர்ச்சியை அதிகமாக்கியுள்ளது.