கொரோனாவை குணமாக்கும் குளோரோகுயின் மருந்து...! சற்று முன் வெளியான சூப்பர் தகவல்!

உலகமே கொரோனாவை ஒழிக்க பல மருந்துகளை கண்டு பிடித்து கொண்டு இருக்கும் வேலையில், அமெரிக்காவை சார்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க குளோரோகுயின் என்கிற மருந்து உதவும் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.


உலகளவில் கொரோனா வைரசுக்கு மக்கள் உயிரிழந்து வரும் நிலையில்,  அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கப்பட்டு மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளதாக பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கும் வேலையில், அமெரிக்காவை சார்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி உள்ளது என்று தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள டெஸ்லா என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜேம்ஸ் தொடாரோ, கிரிகோரி ரிகானோ ஆகியோரால் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட“An Effective Treatment for Coronavirus (COVID19)” கொரோனாவை ஒழிக்க உதவும் ஆய்வுக் கட்டுரைக்கான இணைப்பையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த கட்டுரையில் தென்கொரியாவிலும் சீனாவிலும் குளோரோகுயின் மாத்திரையைப் பயன்படுத்திச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள், குறைந்த காலம் மருத்துவமனையில் தங்கி விரைவில் குணமடைந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.