முன்பின் தெரியாத பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட போலீஸ்காரர்! வைரல் வீடியோ!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை சீருடையுடன் ஹோட்டல் ஒன்றில் ஒரு பெண்ணிற்கு முத்தமிட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த காட்சி பெரோசாபாத் நகரில் உள்ள  ஒரு ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காவல் உதவி ஆய்வாளர் முன்பின் தெரியாத பெண்ணுடன் கடந்த 15 நாட்களுக்கு முன் தனது தங்கும் விடுதிக்கு வந்தாக விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று மணி நேரம் தங்கி விட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தாமல்   சென்றதாகவும் அவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார் அவர் காவல்துறையில் அளித்துள்ள அந்த சி.சி.டி.வி. காட்சியில் இடம்பெற்றுள்ள அந்தப் பெண் அவரது மனைவி அல்ல என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பிரபால் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்