சொத்து வரி கட்டவில்லையா? அப்போ உங்க வீட்டு முன்னாடி பேண்ட் வாத்திய கச்சேரி தான்! ஏன் தெரியுமா?

உத்திர பிரதேசத்தில் சொத்து வரிக்கட்டாதவர்களை குறிவைத்து அவர்களது வீட்டின் முன் நின்று அவர்கள் சொத்து வரியை கட்டும் வரை பேண்ட் வாசித்து நூதன டார்ச்சர்.


உத்திரப்பிரதேச லக்னோ வில் பல ஆண்டுகளாக மாநகராட்சி க்கு சொத்து வரிக்கட்டாத நபர்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்னர் அரசு சார்பில் பேண்ட் வாத்தியங்களை மணிக்கணக்கில் வாசிக்க செய்து வரியை வசூலிக்கும் முறை அமலபடுத்தபட்டுள்ளது.

இதன் விளைவாக ,பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் ஏய்த்து வந்த தொழில் அதிபர் விடுதியின் முன் நின்று பல மணி நேரமாக பேண்டு வாசிக்க சத்தம் தாங்க முடியாமல் அவர் கையில் இருந்த 19 இலட்சம் ரூபாயை உடனடியாக அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதனை அடுத்து அம்மாநிலத்தில் வரியை செலுத்தாவர்கள் சற்று பீதியில் உள்ளனர்.மேலும் இதே போன்ற நடவடிக்கைகள் தமிழகத்திலும் அமல் படுத்தினால் அமோக வெற்றியைத்தரும் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்