சுவாமி சின்மயானந்த் விவகாரம்! சட்டக் கல்லூரி மாணவிக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சுவாமி சின்மாயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.


இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு மாயமாகியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை உத்தரப்பிரதேச காவல்துறை ராஜஸ்தானில் கண்டுபிடித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் சுவாமி சின்மயானந்த் இவருக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டக் கல்லூரி உள்ளது. இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து வரும் ஏழ்மையான மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அதை தட்டிக்கேட்ட மாணவ மாணவியர்களை துன்புறுத்தி கல்லூரியை விட்டு அனுப்பி விடுவதாக தெரிகிறது.

இந்நிலையில் 23 வயது நிரம்பிய மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் தலைவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீடியோ வெளியிட்ட மாணவியை காணவில்லை என அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த மாணவியை உத்திரப்பிரதேசம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். தற்போது ராஜஸ்தானில் அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.