அமைச்சருக்கு கால்களில் ஷூ கட்டிவிட்ட அரசு அதிகாரி!

உத்தர பிரதேசத்தில் யோகா தினத்தையொட்டிய நிகழ்ச்சியில் அமைச்சரின் ஷூ லேசை அரசு அதிகாரி ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் ஷாஜாகன்பூரில்  யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றதில் அதில்  சிறுபான்மையினர் நலன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் கலந்து கொண்டபோது கீழே அமர்ந்து அவருக்கு அரசு அதிகாரி ஒருவர் ஷூ லேஸ் கட்டிவிடுவது போன்ற வீடியோக் காட்சிகள் தற்போது வைரலாக பரவிவருகின்றன.

சர்ச்சைக்குரிய இந்த வீடியோ காட்சிகள் பற்றி கேள்விக்கு,  அமைச்சர் லக்ஷ்மி நாராயண், ராம ராஜ்ஜியத்தில் 14 வருடங்கள் ராமனின் காலணிகள்  ராஜ்ஜியத்தில் இருந்தது போல  அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்ட  வேண்டும் என பதிலளித்தது, பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிவருகிறது.

பலரும் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதனை அமைச்சர் நியாயப்படுத்தி யுள்ளார்.