முதலில் மனைவி! பிறகு 3 குழந்தைகள்! நள்ளிரவில் கணவன் செய்த பயங்கரம்! வீடியோ வெளியான துயரம்!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த நபர் தன் மனைவி குழந்தைகளை தான்தான் கொன்றதாகத் தெரிவித்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காசியாபாத்தைச் சேர்ந்த சுமீத்குமாருக்கு திருமணமாகி 4வயதில் இரட்டை குழந்தைகளும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுமீத் குமார் ஐ.டி. எஞ்ஜினியராக பணியாற்றி வந்த நிலையில் அவரது மனைவியும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இதனால் குடும்பம் வசதியாகவெ இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வேலையை இழந்தார்.

குடும்பம் உரிய வருமானம் இன்றித் தவிக்கத் தொடங்கிய நிலையில் சுமீத் குமார் குடிபழக்கத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் சுமீத்குமார் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மனைவி குழந்தைகளை தானே கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். 

தனது மனைவியையும் 3 குழந்தைகளையும் தனது வீட்டில் இருக்கும் போது குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து தூங்கச் செய்ததாகவும், பின்னர் கூர்மையான ஒரு பொருளை வைத்து அவர்களைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.