காதலனால் கர்ப்பமாகி சொந்த ஊர் வந்த இளம் பெண்ணுக்கு பெற்றோரால் நேர்ந்த கொடூரம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கடந்த ஆண்டு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் காதலித்து வந்தனர்.


மேலும் அவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் வீட்டினர் எதிர்ப்பாராத விதமாக , அவசர அவசரமாக மாப்பிளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த இளம் பெண், வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனை திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு குடியேறினர். இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த இளம் பெண் தனது காதல் கணவருடன் பெற்றோரைப்பார்க்க ஆசையுடன் வந்துள்ளார்.

தகவல் அறிந்த பெண்ணின் வீட்டார்கள் இருவரும் வந்த வாகனத்தின் மீது மிக மோசமாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த தம்பதியினருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க்பட்டு வருகிறது.