முதலில் மனைவி! பிறகு 3 பெண் குழந்தைகள்! துடிக்க துடிக்க கணவன் போட்ட வெறியாட்டம்! அதிர வைக்கும் காரணம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் மனைவியையும் 3 குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அவலம் அரங்கேறியுள்ளது.


காசியாபாத் மாவட்டத்துக்குட்பட்ட மசூரி கிராமத்தைச் சேர்ந்த 37 வயது நபரான பிரதீப் வீட்டில் வெள்ளிக் கிழமை காலையில் குழந்தை வலியால் துடித்து அழும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்ற அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்ற போது பிரதீப் தூக்கிலும் இரு குழந்தைகள் தரையிலும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். பிரதீப்பின் மனைவியும், மற்றொரு குழந்தையும் உயிருக்குப் போராடிய நிலையிலும் கிடந்ததைக் கண்டனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிருக்குப் போராடிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பிரதீப்பின் தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் மனைவி தனது நடத்தை மீது  சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்து அனைவரையும் கொன்றதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த நபர் தெரிவித்தார். மேலும் கொலை செய்யும் போது மனைவியோ குழந்தைகளோ கத்திவிடக்கூடாது என அவர்களின் வாய்களின் டேப்புகளை ஒட்டி கொடூரமாகக் கொலை செய்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த மூன்று குழந்தைகளும் 8, 5 மற்றும் 3 வயதுடையவர்கள். மனைவியின் சந்தேக புத்தியால் ஒரு குடும்பமே சீரழிந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். அதே சமயம் குடும்பத்தை விட்டு வேறு பெண்களுடன் பிரதீப் தொடர்பில் இருந்ததால் ஏற்பட்ட விபரீதம் என்றும் சிலர் கூறுகின்றனர்.