வரம்பு மீறிய திருநங்கைகள்! ஸ்டேசனுக்குள் விட்டு வெளுத்தெடுத்த போலீஸ்! எங்கு தெரியுமா?

மக்களிடம் இருந்து பரிசுப் பெறும் விவகாரத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்ட திருநங்கைகள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஏராளமான திருநங்கைகள் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் அங்குள்ள கடைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்குள் யார் குறிப்பிட்ட சில கடைகளில் யாசகம் பெறுவது என்பது தொடர்பாக ஏற்கனவே மோதல் இருந்துள்ளது.

இந்த நிலையில் பரிசுப்பொருட்களை பெறும் விவகாரத்தில் இரண்டு திருநங்கைக் குழுக்களிடையே மோதலும் தகராறும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மிகவும் ஆபாசமாகவும் அறுவெறுக்கத்தக்க வகையிலும் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்துள்ளது.

இது தொடர்பான மக்களின் புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் காவல் நிலையத்திலு இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒரு கட்டத்தில் திருநங்கைகளை கட்டி வைத்து பிரம்பால் போலீசார் வெளுத்தெடுத்துள்ளனர்.

மேலும் இந்த வட்டாரங்களில் ரயில் பயணிகள் உள்ளிட்டோரிடம் இருந்து திருநங்கைகள் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாகம்  நடைபெறுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 75 ஆயிரம் திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.