லண்டனில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்ணை பிரிட்டன் அமைச்சர் மார்க் ஃபீல்ட் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.
பெண் சமூக ஆர்வலர் கழுத்தை பிடித்து பலர் முன்னிலையில் அமைச்சர் செய்த செயல்! வைரல் வீடியோ!

கிரீன்பீஸ் என்பது 39 நாடுகளில் உள்ள சுற்றுப் புறச் சூழல் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும் அதில் உள்ளவர்களுக்கு எங்கு சென்றாலும் தனி மரியாதை கிடைப்பது உண்டு இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிலிப் ஹாமண்டை நோக்கி கீரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் முன்னேறினார்.
அவரை மார்க் ஃபீல்ட் முரட்டுத் தனமாக தூண் மீது பிடித்துத் தள்ளி பின்கழுத்தில் கையை வைத்து அழுத்தி விருந்து நடக்கும் அரங்கில் இருந்து தள்ளிக் கொண்டு போய் வெளியே விடுவதும், விருந்துக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்ப்பதுமான வீடியோ இணையதளத்தில் வரலாகி வருகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிரீன் பீஸ் அமைப்பினர், மக்களால் தேர்ந்தேடுக்கபப்ட்ட எம்.பி.யும், பொறுப்புள்ள அமைச்சருமான ஒருவர் கீழ்த்தரமாக நடந்துகொள்வது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள மார்க் ஃபீல்டு இது ஒரு திடீர்க் குழப்பத்தால் நேர்ந்தது என்று கூறியுள்ளார். தான் மட்டுமன்றி அனைத்து விருந்தினர்களுமே யாரோ ஒரு போராட்டக் காரப் பெண் நிதியமைச்சரை நோக்கி முன்னேறுவதாக நினைத்துத்தான் அச்சத்தில் ஆழ்ந்ததாகக் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த இடத்தில் பாதுகாவலர்களும் இல்லாத நிலையில் அந்தப் பெண் ஆயுதத்தை மறைத்து எடுத்துச் செல்வதாக கருதியே தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே அமைச்சர் மார்க் ஃபீல்டின் நடவடிக்கை மோசமான மற்றும் அச்சுறுத்தும் வகையிலானது என்று தெரிவித்துள்ள பல்வேறு எம்.பி.க்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மார்க்ஃபீல்ட் டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.