ஐநாவில் பேச வாருங்கள்!மதுரை தலித் மாணவிக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அழைப்பு! ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பெருமை!

ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் படித்த மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.


மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த பிரமலதா என்ற மாணவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்த வர். 

8ம் வகுப்பு படிக்கும்போதே தமிழக அரசின் மனித உரிமை கல்வி பயின்று மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் பங்குபெற்றவர் பிரமலதா. தற்போது கல்லூரி மாணவியினா பிரமலதா அக்டோபரில் ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து பிரமலதா தமிழகத்தை சேர்ந்த மாணவி பிரேமலதா பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து மாணவிக்கு அழைப்பு வந்ததுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் முதன்முறையாக ஐநா சபையில் பேச இருப்பதால் பிரேமலதாவுக்கு வாழ்த்துகள் குவிகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ளதாகவும், மிகவும் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரமலதா.

ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர் என்ற செய்தியும் ஏற்கனவே நமக்கு பெருமை சேர்த்துள்ளது.