நேற்று இரவுக்கு பின் சுஜித் அழுகை சத்தம் கேட்கவில்லை! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் மேல் சேரு விழுந்ததால், குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்துவதிலும் மற்றும் குழந்தையை மீட்கும் பணியிலும் சற்று தொய்வு அடைந்ததாகவும் கூறப்படுகிறது .


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் முதலில் 25 அடி ஆழத்தில் இருந்ததாகவும் மேலும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது கைகளில் இருந்து குழந்தைகள் நழுவி 70 அடி ஆழத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது 70 அடி ஆழத்தில் இருக்கும் அந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக பல மீட்புக் குழுக்கள் நடு காட்டுப்பட்டி கிராமத்தை நோக்கி சென்றுள்ளது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த இரண்டு வயது குழந்தையை மீட்பதற்காக பலவித போராட்டங்கள் மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , 25 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்த நிலையிலும் அதனுடைய அழுகுரல் சத்தத்தைக் எங்களால் கேட்க முடிந்தது. ஆனால் தற்போது ஆழ்துளை கிணற்றில் 75 அடியில் சிக்கியுள்ள குழந்தையின் மேல் மண் மற்றும் சேறு ஆகியவை சரிந்து விழுந்ததால் குழந்தைக்கு சரியான ஆக்சிஜனையும் எங்களால் செலுத்த இயலவில்லை . அதேபோல் அதனுடைய அழுகுரல் சத்தத்தையும் எங்களால் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பெரும் சோகத்துடன் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.