வீட்டை விட்டு வெளியே வந்தாலே தூக்குங்கள்..! தெறி உத்தரவு போட்ட காவல்துறை அதிகாரி! பைக் பத்திரம் மக்களே..!

திருநெல்வேலியில் மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்பவர்கள் இனி டூவீலர்கள் பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அதிகாரி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க நாடு முழுவதும் வருகிற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக வெளியில் சுற்றித் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி காவல்துறை அதிகாரி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி இன்று முதல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்பவர்கள், மளிகை கடைக்கு செல்பவர்கள், மருந்தகத்திற்கு செல்பவர்கள் டூவீலரை எடுத்துச் செல்லக்கூடாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தடையை மீறி டூவீலர் எடுத்துச் சென்றால் அவர்களின் வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் திருநெல்வேலி காவல்துறை அதிகாரி அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.