சென்னையில் ஆன்லைன் ஹைடெக் விபச்சாரம்! கண்டுபிடித்த போலீஸ் செய்த தகாத செயல்!

பூந்தமல்லியில், இணையதளம் வழியாக, பாலியல் தொழில் நடத்தி வந்த நபரிடம் மோசடி செய்த ஆயுதப் படை போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


பூந்தமல்லி பகுதியில், இணையதளம் வழியாக, பாலியல் தொழில் நடப்பதாக, புகார் கிடைத்தது. இதை அறிந்த ஆயுதப் படை போலீசில் பணிபுரியும் சார்லஸ், மோகன் ஆகியோர் ரூ.20 ஆயிரம் கொடுத்து, இணையதளத்தில் முன் பதிவு செய்தனர்.

பின்னர் குறிப்பிட்ட இடத்திற்குச்சென்ற அவர்கள் 2 பேரும், தங்களை விபசார தடுப்புப் பிரிவு போலீசார் எனக் கூறி மிரட்டி, அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களிடம்  இருந்து 14 சவரன் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிவிட்டனர். 

இதன்பேரில், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததால், ஆயுதப் படையில் பணிபுரியும் சார்லஸ், மோகனை போலீசார் கைது செய்தனர்.