முதலில் பெண்கள்! பிறகு வயாகரா! தொடர்ந்து வீடியோ! பணக்கார இளைஞர்களிடம் பணம் பறிக்கும் பகீர் கும்பல்!

ஆபாச வீடியோ எடுத்து, பலரிடம் பணம் பறித்து வந்த, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


நுர் மஸார் (38), மகேந்தர் (33) ஆகிய 2 பேரைத்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள், 2 பேரும் பணக்கார நபர்களை குறிவைத்து, அவர்களுடன் பெண்களை நெருங்கிப் பழகச் செய்வது வழக்கம். பின்னர், அதனை வீடியோவாக எடுத்து, அந்த நபர்களை மிரட்டி, பணம் பறிப்பதையும் வாடிக்கையாகச் செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டில், டாக்டர் ஒருவரிடம் மத்திய கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் சரியில்லை என வந்துள்ளார். அடிக்கடி வந்து டாக்டரிடம் நெருங்கிப் பழகிய அவர், ஒருநாள் வீட்டுக்கு வரும்படி, அழைத்துள்ளார். அப்போது குளிர் பானத்தில் வயாகரா கலந்துகொடுத்து, டாக்டருக்கு, செக்ஸ் ஆசை காட்டி, உடலுறவு செய்துள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்துவைத்து, அடிக்கடி டாக்டரிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கியிருக்கிறார். அந்த பெண்கூடவே,  மேலும் சிலரும் வந்து டாக்டரை மிரட்டியுள்ளனர்.  இதுபற்றி டாக்டர் போலீசில் புகார் அளித்தை தொடர்ந்து, அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல நிறைய பேரை இவர்கள் மிரட்டி, காசு சம்பாதித்துள்ளதாகவும், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும், போலீசார் தேடிவருகின்றனர்.