விஜய் முறைப் பொன்னை தட்டி தூக்கிய அதர்வா தம்பி!

வளர்ந்து வரும் கோலிவுட் கதாநாயகரின் தம்பியும், இளைய தளபதியின் தங்கையும் காதலித்து வந்த செய்தியானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மறைந்த பிரபல கதாநாயகரான நடிகர் முரளியின் மகன் அதர்வா. முரளியின் மற்றொரு மகனின் பெயர் ஆகாஷ். இவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்தவர். இவர் படித்த அதே கல்லூரியிலேயே, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கையான விமலாவின் மகள் சினேகா பிரிட்டோ படித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருக்கமானது காதலாக மாறியது. ஆகாஷ் தற்போது சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் முதலியவற்றை கவனித்து வருகிறார்.

தற்போது இவ்விருவரின் காதலையும் இருவீட்டாரும் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளிவந்துள்ளது. டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் வியப்புக்குரிய கருத்துக்களை கூறினார்.

அதாவது,  முதலில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், காதல் ஜோடியின் உறுதியினால் இருவர் வீட்டிலும் சம்மதம் தரப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது இருவீட்டாரும் யோசித்து முடிவெடுப்பதற்கு இருவரின் மதமும் காரணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

சினேகா பிரிட்டோ சிறுவயதிலிருந்தே விஜய்யின் வீட்டில் தான் வளர்ந்த வந்துள்ளார்.  மேலும் சினேகாவுக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட்டதால், "சட்டம் ஒரு இருட்டறை-2" படத்தில் சந்திரசேகர் அவரை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். ஆகாஷ் தற்போது ஹோட்டல் பிசினஸில் பிஸியாக இருந்தாலும் அவருக்கும் நடிப்பதற்கான ஆசையுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இளையதளபதி விஜய் நடித்திருந்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் போன்று இருவீட்டாரும் இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.