தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை! தெரியாமல் மூடிய கொடூரம்! பெற்றோர் அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்!

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் சந்தோஷ். நேற்று அந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தது. 

அப்போது எதிர்பாராவிதமாக திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த குழந்தை விழுந்தது. இதனையறியாத அருகில் இருந்தோர் அந்த தொட்டியினை மூடியுள்ளனர். 

சந்தோஷின் சத்தம் கேட்காமலே இருக்க அவன் தாயாரான மகாலட்சுமி சந்தேகித்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் சந்தோஷ் கிடைக்காததால் விரக்தி அடைந்தார். இறுதியாக அருகில் இருந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தார்.

அதில் சந்தோஷ் முழ்கிக்கிடந்ததை கண்ட மகாலட்சுமி மிகவும் அதிர்ச்சி அடைந்தார் பின்னால் கூச்சலிட்டு அருகிலிருந்தோரை வரவழைத்து குழந்தையை மீட்டெடுத்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தொட்டியிலேயே மூழ்கி இறந்து விட்டதாக கூறினர். இந்த துயரச்சம்பவமானது கோவை மாவட்டத்தை கவலை மேகத்தால் சூழ்ந்துள்ளது.