ரூ.10000 கடனுக்கு குழந்தையின் கண்களை பிடுங்கி வெறியாட்டம்! பதற வைக்கும் சம்பவம்!

இரண்டரை வயது சிறுமி கண்களை பிடுங்கி கொலை செய்யப்பட்ட கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் தம்பதியினர்  அதே பகுதியை சேர்ந்த ரூ.10,000 கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பிச் செலுத்த அவர்கள் கஷ்டப்பட்ட நிலையில், கடன் கொடுத்த நபர்கள் வீடு புகுந்து மிரட்டியுள்ளனர்.

அத்துடன், அந்த தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். அந்த சிறுமியின் கண்களையும் தோண்டியெடுத்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளியை கைது செய்துள்ளனர்.