நான் பிரபலமாக எனது உடலின் அந்த பாகம் தான் காரணம்! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட சீக்ரெட்!

ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் பாட்ஷா. இந்த திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் ஆகிறது.


இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த ட்விங்கிள் கன்னா தனக்கு இந்த திரைப்படத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் . அவர் சற்று நகைச்சுவை கலந்த விதமாக அந்த பதிவினை வெளியிட்டிருந்தார். ஷாருக்கான் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் பிரபலமாவதற்கு முக்கியமாக இருந்தது அவருடைய தொப்புள் தான்.

அதைப் பற்றித்தான் நகைத்து அந்த பதிவில் ட்விங்கிள் பேசியிருந்தார். மேலும் "எனக்கு ஒருபோதும் நல்ல மதிப்புரைகள் கிடைக்கவில்லை என்று நான் சொன்னேனா? ஒரு உணர்ச்சிபூர்வமான உடல் பாகத்தின் ஆதரவோடு நான் வெளிப்படையாகச் செய்தேன்! தற்போது பாட்ஷா திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் வெற்றிகரமாக ஓடி விட்டது "என்று இந்த பதிவில் வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவினை #navelgrazing என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக் கான் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகியோர் இணைந்து நடித்த பாட்ஷா திரைப்படம்  , இயக்குனர் அப்பாஸ்-முஸ்தான் இயக்கியது ஆகும்.

கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றுவதற்காக துப்பறியும் ஒரு நபரின் கதையை மையமாக கொண்டு இந்த திரைப்படமானது உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படமானது இரண்டு பிலிம்பேர் விருதுகளை பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் சாதனையை நிகழ்த்தியது என்றே கூற வேண்டும்.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த போது டிவிங்கிள் கண்ணாவின் தொப்புள் தான் அவருக்குபிரபலத்தை தேடித் தந்தது. இதனைத்தான் எனது உடலின் ஒரு பாகம் எனக்கு பிரபலமாக உதவியது என்று டிவிங்கிள் கண்ணா இப்படி கூறியுள்ளார். பிரபல நடிகர் அக்சய் குமாரை திருமணம் செய்து கொண்டு டிவிங்கிள் கண்ணா செட்டில் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.