நட்ட நடு ராத்திரி! தலையில் ஹெல்மெட்! ஓமலூரை கதிகலங்க வைக்கும் இரட்டைத் திருடர்கள்! பரபரப்பு சிசிடிவி!

இரட்டை திருடர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ள சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஓமலூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நிறைய சமூக குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக "இரட்டை திருடர்கள்" என்று அழைக்கப்படுபவர்களின் அட்டூழியத்தை அப்பகுதி மக்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ஓமலூருக்குட்பட்ட கடைவீதி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் நுழைந்த இரட்டை திருடர்கள் அங்கு நிற்க வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த "ராயல் என்ஃபீல்ட்" ரக இருசக்கர வாகனத்தை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த குடியிருப்புக்குள் செல்லும்போது இருவரும் தலைக்கவசம் அணிந்து சென்றதால் காவல்துறையினரால் அடையாளத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.

2 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் இரட்டை திருடர்கள் ஒரு பெண்ணை கத்தியை காண்பித்து மிரட்டியுள்ளனர். அவரிடமிருந்த பணம் நகை முதலியவற்றை பறித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இதுவரை 4 இருசக்கர வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இரட்டை திருடர்களை விரைவில் கண்டுபிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுத்தருமாறு காவல்துறையினரை வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஓமலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.