தஞ்சையில் வலியில் துடித்த கர்ப்பிணிக்கு, மருத்துவர் செல்போன் மூலம் சிகிச்சை அளித்ததால் வயிற்றிலிருந்த இரட்டை சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலியில் துடித்த கர்ப்பிணிக்கு செல்போன் மூலம் சிகிச்சை! பெண் டாக்டரின் அலட்சியம்! பரிதாபமாக உயிரிழந்த இரட்டை சிசு! தஞ்சை அபி & அபி ஹாஸ்பிடல் விபரீதம்!
தஞ்சாவூரில் உள்ள பூண்டி கல்லூரி சாலையில் அமைந்திருக்கும் இடத்தில் குமரவேல் மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது . இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள அபி அண்ட் அபி என்ற மருத்துவமனையில் மருத்துவர் ராதிகா ராணி என்பவர் அளித்த சிகிச்சையின் பெயரில் விஜயலட்சுமி கருவுற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த விஜயலட்சுமி, பல லட்ச ரூபாய் செலவு செய்து மருத்துவர் ராதிகா ராணி அளித்த சிகிச்சை எடுத்து இரட்டை குழந்தைகளை தன் கருவில் சுமக்க ஆரம்பித்தார். இதனால் அவர்களது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று 5 மாத கர்ப்பிணியான விஜயலட்சுமிக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. பிரசவத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் விஜயலட்சுமி குடும்பத்தினர் உடனடியாக அவரை அபி அண்ட் அபி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது விஜயலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர் ராதிகா ராணி , குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும் படி கூறியிருக்கிறார். விஜயலட்சுமி குடும்பத்தினர் மருத்துவரின் ஆலோசனைப்படி அபி அண்ட் அபி மருத்துவமனையில் உடனடியாக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர் ராதிகா ராணி விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கும்மாறு கூறி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் விஜயலட்சுமி வலியால் மிகவும் துடித்திருக்கிறார் . அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் மருத்துவம் பார்த்துள்ளனர். இருப்பினும் விஜயலட்சுமியின் வலி தீரவில்லை.
இதனையடுத்து செவிலியர்கள் மருத்துவர் ராதிகா ராணி செல்போனில் தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைப்படி விஜயலட்சுமி சிகிச்சை அளித்துள்ளனர். விஜயலட்சுமியின் நிலை என்ன என்பதை நேரில் காணாமல் மருத்துவ ராதிகா ராணி சொன்னதை வைத்து செவிலியர்கள் மருத்துவம் செய்ததினால் விஜயலட்சுமியின் பனிக்குடம் உடைந்து உள்ளது.
எவ்வளவோ முயற்சி செய்தும் செவிலியர்கள் ஆல் விஜயலட்சுமியின் வலியை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனையடுத்து அவர் அவசர அவசரமாக ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டார் இருப்பினும் அங்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் ஆபரேஷன் தாமதமாகியுள்ளது.
பின்னர் மருத்துவர் ராதிகா ராணி செல்போன் மூலம் தஞ்சையில் உள்ள வேறு ஒரு மருத்துவரை அணுகி உள்ளார் இதனை அடுத்து மற்றொரு மருத்துவர் அபி அண்ட் அபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு மருத்துவம் அளிப்பதற்காக விரைந்து வந்துள்ளார்.
அப்போது விஜயலட்சுமியை பரிசோதனை செய்த அந்த மருத்துவர் அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் கூறினார் . இதனைக் கேட்ட விஜயலட்சுமியின் கணவர் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் விஜயலட்சுமி வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் உயிரை அந்த மருத்துவர் காப்பாற்றினார்.
இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியத்தால் இரட்டைச் சிசுக்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக விஜயலட்சுமியின் குடும்பம் கண்ணீர் மல்க கதறியது. இந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.