டிவி நடிகை குடித்துவிட்டு கும்மாளம்! தட்டிக்கேட்ட போலீசுக்கு பளார்! ..

மும்பை: மும்பையில் பெண் போலீசை மது போதையில் தாக்கிய வழக்கில் டிவி சீரியல் நடிகை ருகி சிங் மற்றும் அவரது நண்பர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்துள்ளனர்.


பிரபல டிவி நடிகை ஆனா ருகி சிங் மற்றும் அவரது நண்பர்களான ராகுல் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மது போதையில் கார் ஓட்டிய தாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் காரில் வேகமாக சென்றுள்ளனர் இதைப்பார்த்து தடுத்து நிறுத்திய பெண் போலீசை தகாத வார்த்தைகள் பேசியும் அவரை அடித்தும் உள்ளனர்.

இரவு நேரம் என்பதால் அவர்கள் மது அருந்திய பிறகு அருகில் உள்ள உணவகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று உள்ளனர் அப்போது அங்கு உணவகம்  பூட்டியிருந்த நிலையில் மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர் . வேலையில் இருந்தவர்களை  தரக்குறைவாக பேசியுள்ளனர்  அதை எடுத்து  அங்கு இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .இதை தொடர்ந்து அருகில் இருந்து வந்த பெண் போலீசிடம் தகாத வார்த்தைகள் பேசியும் அவரை அடித்து உள்ளனர். 

பின்னர் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார் பெண் போலீஸ் பின் அங்கு வந்த அதிகாரிகள்  மூவரையும் பரிசோதித்த போது அவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் நடந்தது பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அது தொடர்ந்து அதிகாலை அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரில் ரத்தப் பரிசோதனை மற்றும் மது அருந்தி உள்ளனரா என்பதையும் பரிசோதனை செய்து அறிக்கையை பெற்ற  கர் நகர போலீசார் அவர்கள் மூவரையும் பிரிவு எண் 323 தவறாக நடந்து கொண்டதற்காகவும் மற்றும் பிரிவு எண் 332 பணியில் உள்ள அரசாங்க அதிகாரியை தாக்கியதாகவும் மற்றும் பிரிவு எண் 510 மற்றும் 504 குடிபோதையில் வாகனம் ஓட்டி சேதம் ஏற்படுத்தியதற்காகவும் பிரிவு எண் 34, ஆகிய 5 பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்றும் ருகி சிங் மீது சாண்டா கிளாஸ் காவல்துறையினர் இரண்டாவது வழக்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு எண் 279 சாலை பாதுகாப்பு மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்குதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.