23 வயது இளம் நடிகருக்கு தம்பி பாப்பா! 50 வயதில் தந்தை செய்த தரமான சம்பவம்! யார் தெரியுமா?

இந்தி திரையுலகில் இளம் நடிகரான இஷான் காதரின் தந்தை ராஜேஷ் காதருக்கு 50 வயதில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


தொலைக்காட்சி நடிகரான ராஜேஷ் காதர் , நடிகை மற்றும் தயாரிப்பாளரான வந்தனா சஞ்சனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கிருஷ்ண ஜெயந்தியன்று தன் இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் நடிகர் ராஜேஷ். இந்த குழந்தை பிறப்பு பற்றிய ராஜேஷ் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசுகையில் ராஜேஷ் காதரின் மனைவி வந்தனா இரட்டை குழந்தைகளை சுமந்து இருந்திருக்கிறார். கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலேயே சஞ்சனாவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சஞ்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சனாவின் கருப்பையில் வளரும் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வளர்ச்சி குறைவாக உள்ளது என்று தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து சில காலங்களிலேயே சஞ்சனாவை மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை உடனடியாக வெளியே எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து குழந்தை ஆனது 3 மாதம் முன்பாகவே பிறந்துவிட்டது . அதில் ஒரு குழந்தை மட்டும்தான் உயிர் பிழைத்தது மற்றொரு குழந்தை துரதிஷ்டவசமாக உயிரை இழந்து விட்டது என்று கூறினார் ராஜேஷ் காதர்.

உயிர் பிழைத்த மற்றொரு குழந்தையை மருத்துவர்கள் NICU- வில் 3 மாதங்கள் வைத்திருந்தனர். மூன்று மாதங்கள் கழித்து கடந்த கிருஷ்ணஜெயந்தி அன்றுதான் ராஜேஷ் காதரின் குழந்தையும் அவரது மனைவியும் தன் இல்லத்திற்கு வந்துள்ளனர். 

50 வயதான ராஜேஷ் காதர் தற்போது தந்தையாக இருப்பது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒன்று தான். ராஜேஷ் காதர் சஞ்சனாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நீலிமா என்பவரை மணந்து உள்ளார். ராஜேஷ் தற்போது இந்தி திரை உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது தோழிகள் மட்டும்தான்