பியூட்டி பார்லரில் டிவி நடிகர் காதலியின் அந்த இடத்தில் டச்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

ஹிந்தியில் சின்ன திரையில் மனோன்மணி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் அபிமன்யு சவுத்தரி.


இவர் சலூனில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை கத்தியை வைத்து மிரட்டியது மட்டும் இல்லாமல் அவரை தாக்கியும் உள்ளார்.  இந்த சம்பவம் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றத்தில் ஈடுப்பட்டதற்காக  இவரையும் இவரது நண்பரையும் போலீசார் கைது அதிரடியாக செய்யது உள்ளனர்.

மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷைலேஷ் பசல்வாட் கூறுகையில், கடந்த மே 16-ஆம் தேதி நடிகர் அபிமன்யு சவுதரியின் தோழி ஒருவர் லோகன்ட்வாலா சலூனிற்க்கு சென்று உள்ளார். அப்போது அவருடைய தலையை மசாஜ் செய்த சலூன்  ஊழியர் ஒருவர் இந்த பெண்ணிடம்  தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். மேலும் தவறான நோக்கில் இந்த பெண்ணை தொட்டதாகவும்  கூறப்படுகிறது. 

இதனை அடுத்து பயந்து போன அந்த பெண் செய்வது அறியாது, தன்னுடைய நண்பரான நடிகர் சவுதரியிடம் தனக்கு  நடந்தை கூறியுள்ளார். இதனை கேட்ட  சவுதரி, அவரும் அவருடைய நண்பரும் இணைந்து அந்த சலூனிற்கு சென்று உள்ளனர். அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை தாரு மாறாக அடித்து தாக்கியுள்ளனர்.  மேலும் அங்கிருந்த கத்தியை பயன்படுத்தி அவனை மிரட்டியும் உள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த நபரும், அந்த சலூனில் வேலைபார்க்கும் மற்றொரு ஊழியரும் பலத்த காயம் அடைந்து உள்ளனர்.  இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த cctv கேமராவில்  பதிவானது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடிகர் சவுத்தரி, அவரது நண்பர்  மற்றும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சலூன் ஊழியர் ஆகிய மூவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.