கோவை கிங்ஸ் அணியை சம்பவம் செய்த தூத்துக்குடி பேட்ரியோட்ஸ் அணி! TNPL அப்டேட்!

தூத்துக்குடி பேட்ரியோட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது.


மழையின்  காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஆனதால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி பேட்ரியோட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுப்ரமணிய சிவா அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார்.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் அந்தோணி தாஸ் 3 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே சேர்த்தது.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் அந்தோணி தாஸ் 63 ரன்களை விளாசினார். இதனால் தூத்துக்குடி பேட்ரியோட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது.