காரைக்குடி காளை அணியை தெறிக்க விட்டு வென்ற தூத்துக்குடி அணி !

தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை அபாரமாக வென்றது .


முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது . அந்த அணியின் கேப்டன் சுப்ரமணியசிவா அதிகபட்சமாக 40 பந்துகளில் 87 ரன்களை விளாசினார் .

பின்னர் களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் பேட்ஸ்மேன்கள்  தூத்துக்குடி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் . இதனால் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது .

தூத்துக்குடி அணியின் தமிழ்குமரன், செந்தில்நாதன் ,வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் .

இதனால் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வென்றது.