ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த டிடிவியின் வலது கரம் கலைராஜன்!

கலைராஜன்


அதிமுகவில் தென் சென்னை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர் கலைராஜன். இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதிமுக பிளவுபட்டபோது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அம்மா மக்கள்.முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். கலைராஜன் சசிகலாவின் உறவினரும் கூட. கடந்த சில நாட்களாக டி.டி.வி.தினகரனுக்கும் கலைராஜனுக்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லை.

மேலும் அமமுக கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் கலைராஜன் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், நாளை திருச்சியில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்து கொள்ளவிருக்கிறார். அதிமுகவில் இருந்து தினகரன் பிரிந்த போது அவரது வலதுகரமாக இருந்தவர் கலைராஜன்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் வர நினைத்தால் ஓ.பிஎஸ் கையை வெட்டுவேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் கலைராஜன். இத்தனைக்கும் அப்போது ஓ.பி.எஸ் முதலமைச்சராக வேறு இருந்தார்.

தற்போது கலைராஜன் திமுகவில் இணைய உள்ளது தினகரன் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கலைராஜனை அமமுகவில் இருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் திருச்சியில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் கலைராஜன்.