நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதலிடம்! இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை இதுதான்! தெறிக்கவிடும் டிடிவி தினகரன்!

நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு தான் முதல் இடமாம். இதுதான் இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்று டிடிவி தினகரன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சகம் நாட்டிலேயே நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. பல்வேறு துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பற்றி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டிலேயே நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம். இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு 2019 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுகிறது என்று ஆமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.