நீ இல்லாமல் தவிக்கிறேன்! உயிரிழந்த காதலன் நினைவாக பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட புகைப்படம்! நெகிழ்ச்சி சம்பவம்!

சஞ்சய் தத் அவர்களின் மகளான த்ரிஷாலா தத் மறைந்து போன அவருடைய காதலருடன் இணைந்திருக்கும் விதமான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


திரிஷாலா   தன்னுடைய காதலர் இறந்து போன சம்பவத்தை கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டார். தற்போது மேலும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷாலா  தத்.

இந்த புகைப்படத்தில்  திரிஷாலா  தத்தின் மடியில் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த   அவரது காதலர் அமர்ந்திருப்பது போல உள்ளது. இந்த புகைப்படத்தில் திரிஷாலா  கருப்பு நிற மேலாடையும் ஜீன்சும் அணிந்திருந்தார் மேலும் இதற்கு கேப்சனாக , " ஐ லவ் யூ ,  ஐ மிஸ் யூ , " என்றும் பதிவு செய்துள்ளார். 

அவருடைய காதலர் இல்லாமல் தவிப்பதாகவும், அதுமட்டுமில்லாமல் அவரது நினைவில் வாடுவதாகவும் திரிஷாலா  அந்த பதிவில் கூறியிருந்தார் .