திருச்சி திக கூட்டத்தில் இந்து முண்ணனி கல்வீச்சு! 2 பேர் மண்டை உடைப்பு! தப்பி ஓடிய வீரமணி!

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கல் வீசியதில் இரண்டு பேர் மண்டை உடைந்தது.


திருச்சி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.க.தலைவர் வீரமணி பேச வந்த பிரச்சாரக் கூட்ட மேடையில் இந்து முன்னணியினர் செருப்புகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து இன்று திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அதற்குள் காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணியினர் இடையே மோதல் மூண்டது.

கல்வீச்சில் திகவினர் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. மேடையை நோக்கி வந்த வீரமணி மோதலை தொடர்ந்து அங்கிருந்து வேக வேகமாக புறப்பட்டுச் சென்று தப்பினார். இதனைதொடர்ந்து இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போதராஜ் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் தற்போது திருச்சி காந்தி மார்கெட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.