ஊரடங்கில் உணவுக்காக பாம்பு வேட்டை! 12 அடி நீள ராஜநாகத்தை சமைத்து சாப்பாடாக்கிய 3 பேர்..! பீதி கிளப்பும் சம்பவம்! எங்கு தெரியுமா?

சாப்பிட அரிசி கிடைக்காத காரணத்தினால் இளைஞர்கள் ராஜநாகத்தை வேட்டையாடிய சம்பவமானது அருணாச்சல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 24,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 16,316 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 2,302 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 519 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் நோய் பரவலை தடுப்பதற்காக மே-3-ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூலித்தொழிலாளர்கள் இந்த ஊர் அடங்கினாள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புலம்பெயர்ந்து தொழிலாளர்களும் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில், ஊரடங்கு உத்தரவினால் காட்டு பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மலைவாழ் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் வேறுவழியின்றி இளைஞர்கள் சிலர் தங்களுடைய உணவிற்காக 12 அடி ராஜநாகத்தை வேட்டையாடி உள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அந்த இளைஞர்கள் வேட்டையாடிய பாம்பை வெட்டி வீசுவதற்காக மிகப்பெரிய வாழை இலையை தயார் நிலையில் வைத்துள்ளனர். வேட்டையாடிய இளைஞர்களில் ஒருவர், "எங்களுக்கு உண்பதற்கு உணவு கிடைக்காத காரணத்தினால், வேட்டையாடுவதற்கு காட்டிற்கு சென்றோம். அப்போது இது எங்களிடம் சிக்கியது" என்று கூறினார்.

மேலும், இந்திய சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளில் ராஜநாகம் ஒன்றாகும். மேலும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இதுபோன்று பலவகையான பாதுகாக்கப்பட வேண்டிய நாகங்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.