அந்த இடத்தில் தாங்க முடியாத வலி..! கதறிய நபரை காப்பாற்ற அவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி எடுத்த டாக்டர்! விமானத்தில் பரபரப்பு!

சிறுநீரை வாயால் உறிஞ்சியெடுத்து பயணியை மருத்துவர் ஒருவர் காப்பாற்றி உள்ள சம்பவமானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் கியாகாங்கோ நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சதர்ன் ஏர்லைன்ஸ் 19-ஆம் தேதியன்று கிளம்பியது. விமானம் கிளம்பி பல மணி நேரமானது. இரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது விமானம் தலைமை ஊழியர் அறையை விட்டு வெளியே வந்து, "விமானத்தில் பயணிக்கும் மூத்த குடிமகன் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க இயலாமல் தாங்கமுடியாத வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் யாரேனும் உதவிக்கு முன் வருவீர்களா" என்று கேட்டுள்ளார்.

அப்போது சீனாவை சேர்ந்த வாஸ்குலார் மருத்துவரான ஜாங் என்பவர் பாதிக்கப்பட்டுள்ள பயணியிடம் சென்று அவரை சோதித்து பார்த்துள்ளார். அப்போது அவருடைய சிறுநீர்ப்பையில் 1,000 மில்லி லிட்டருக்கும் மேலாக சிறுநீர் இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் அவற்றை வெளியேற்றுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறியுள்ளார்.

உடனடியாக மருத்துவர் ஊசி, வைன் பாட்டில் முதலியவற்றை உபயோகித்து சிறுநீரை வெளியே எடுக்க எண்ணினார். ஆனால் விமானத்தில் கேபின்கள் குறைவாக இருந்ததால் அவரால் இயலவில்லை. நேரம் கடக்க கடக்க அந்த பயணிக்கு வலி அதிகமாகியுள்ளது. உடனடியாக மருத்துவர் வாய்வழியாக சிறுநீரை வெளியேற்ற முடிவெடுத்துள்ளார். 

37 நிமிட தொடர் போராட்டத்திற்கு பிறகு 700 முதல் 800 மில்லி லிட்டர் சிறுநீரை அவர் வாயால் உறிஞ்சி வெளியே எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த பயணி சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.

விமான நிலையத்தில் இறங்கிய உடன் பயணியை மருத்துவர்கள் செக்கப்பிற்காக அழைத்து சென்றனர். இது குறித்து அந்த சீன மருத்து வரிடம் விசாரித்தபோது, "அவரின் உயிரை காப்பாற்றுவது மட்டுமே என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அதை தவிர்த்து நான் வேறு எதையும் யோசிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சீனா நாட்டில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.